தலைப்புச் செய்திகள்

கைதிகளிடையே நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ரு கைதிக் குழுக்களுக்கு இடையே நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவுவதற்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.