
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டனர்.
இதன் போது 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் சிறை வளாகத்திற்குள் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதல் மற்றும் உயிரிழப்புகளுக்கான காரணங்களை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



