தலைப்புச் செய்திகள்

பிலிபைன்ஸ் நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழப்பு: 129 பேர் காயம்

பிலிபைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். 129 பேர் காயமடைந்தனர்.

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் – கட்டடங்கள் இடிந்து விழுந்தன, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நிலநடுக்கத்தை அடுத்து Soccssargen பிராந்தியத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய தீவான மின்டானோவிலுள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் கடற்கரைக்கு அப்பால், உள்ளூர் நேரப்படி காலை 7:37 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த சக்திவாய்ந்த அதிர்வு நாட்டின் பரந்த பகுதிகளில் உணரப்பட்டதுடன், நிலநடுக்க மையத்திலிருந்து 200 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள அண்டை நாடான இந்தோனேசியாவிலும் உணரப்பட்டது.