
பஹிரவகந்த பிரதேச விகாரையொன்றில் பணியாற்றி வந்த 25 வயது பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தையின் சகோதரரான குறித்த சந்தேக நபரை, இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மே 20ஆம் திகதி கண்டி பொலிஸார் கைது செய்தனர்.
இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, பஹிரவகந்த-யைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவரும் அதே நாளில் கைதானார்.
சந்தேக நபர்கள் இருவரும் மே 21 அன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனையடுத்து பிக்கு – இன்று 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் பெண் சந்தேக நபர் தலா ரூ. 200,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


