
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நீர் போத்தல்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அரசாங்க நிறுவனங்கள் இன்று முதல் – ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நீர் போத்தல்களை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க, உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களை அந்தச் சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும் – அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.


