
இஸ்லாத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 26 அன்று மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், ஞானசார தேரருக்கு எதிராக, சட்டமா அதிபர் – இந்த வழக்கு தாக்கல் செய்தார்.
இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக ஜூன் 26 அன்று – வழக்கை மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல உத்தரவிட்டார்.


