தலைப்புச் செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் பலி; இலங்கைப் பெண்ணுக்கு காயம்

லெபனான் மீது நேற்று (08) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம், அப்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், 10 நிமிட இடைவெளியில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கடுமையான தொடர் தாக்குதல்களின் விளைவாக 254 பேர் கொல்லப்பட்டனர்; 1,165 பேர் காயமடைந்ததனர் என லெபனானின் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்கில் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஈரானுடன் மட்டுமே போர் நிறுத்தம் அமுல் செய்யப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்தும் தாக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.