தலைப்புச் செய்திகள்

யுரேனியம் செறிவூட்டல் திட்டம் குறைக்கப்படாது: ஈரானின் அணுசக்தி தலைவர் இஸ்லாமி தெரிவிப்பு

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் குறைக்கப்படாது என, அந்த நாட்டின் அணுசக்தி தலைவர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த நிபந்தனைகளில் யுரேனியத்தை செறிவூட்டலை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என்றும், அதனை மீறினால் – இதுவரை யாரும் கண்டிராத தாக்குதல் ஈரான் மீது நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தெரிவித்திருந்த நிலையில், ஈரான் அணுசக்தி தலைவரின் இந்த நிலைப்பாடு வெளியாகியுள்ளது.

“ஈரானின் செறிவூட்டல் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் எதிரி வெற்றி பெற மாட்டார்” என அவர் கூறியதாக ஈரானிய மாணவர் செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்பான செய்தி: நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால், யாரும் கண்டிராத தாக்குதல் தொடங்கும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை