தலைப்புச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்பு; 110 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

நாட்டில் அவசரகால நிலையை நீடிப்பதற்கு ஆதரவளிக்கும் தீர்மானம், இன்று (9) நாடாளுமன்றத்தில் 110 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம் 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் பதிவாகின.

ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் உறுப்பினர்களும், யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தேவை என, இலங்கை தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.