தலைப்புச் செய்திகள்

ஈரானின் ஒன்றரைக் கோடி ரூபாயை அழிக்க, 126 கோடி ரூபாயை செலவிடும் எதிரி நாடுகள்: யுக்ரேன் தொழில்நுட்பத்திடம் சரண்

மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது ஈரான் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் 500க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ஏவி தாக்குதல் நடத்திய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களை முறியடிக்க, ஏவுகணை இடைமறிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கைக்கோள்களும் நிலத்தில் உள்ள ரேடாகும் வான்வெளியில் தொடர்ச்சியாக கண்காணித்து அங்கு ஊடுருவும் பொருட்களை கண்டறிவதன் மூலம், அச்சுறுத்தலான பொருட்கள் இடைமறிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றது.

ஈரான் தாக்குதலுக்காகப் பயனப்படுத்தும் ட்ரோன்களை இடைமறிப்பதற்காக பயன்படுத்தப்படும் பேட்றியாட் ஏவுகணையின் விலை சுமார் 40 லட்சம் டொலர்களாகும். இது இலங்கைப் பெறுமதியில் சுமார் 126 கோடி ரூபாய். ஆனால் ஈரான் ட்ரோனின் விலை 50 ஆயிரம் டொலர்களுக்கும் குறைவானது. இலங்கைப் பெறுமதியில் இது சுமார் ஒன்றரைக் கோடி ரூபாயாகும்.

அதனால் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்க யுக்ரேனின் மலிவான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மத்திய கிழக்கு நாடுகள் பயன்படுத்துகின்றன.