
ஈரானின் ‘IRIS Bushehr’ எனும் கடற்படைக் கப்பலில் இருந்து மொத்தம் 204 பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலிருந்த குறித்த கப்பலில் இருந்து, மேற்படி பணியாளர்கள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று (5) சம்பவம் குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்தக் கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் வெலிசர கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி, அவர்களின் பதிவு, வைத்திய பரிசோதனைகள் மற்றும் உணவு வழங்கல் ஆகியவை வெலிசர கடற்படைத் தளத்தில் வழங்கப்படும்.

‘IRIS Bushehr’ கப்பலில் 53 அதிகாரிகள், 54 கேடட் அதிகாரிகள், 48 சிரேஷ்டமானவர்கள் மற்றும் 23 கனிஷ்ட மாலுமிகளைக் கொண்டுள்ளனர்.


