தலைப்புச் செய்திகள்

வளைகுடா நாடுகள் மீது, ஈரான் தொடர்ந்தும் தாக்குதல்

த்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளை ஈரான் தொடர்ந்து தாக்கி வருகின்றது.

அமெரிக்கா தனது ராணுவ வலிமையை நிலை நாட்டுவதற்காக, ஒவ்வொரு வளைகுடா நாடுகளிலும் மிகப்பெரிய ராணுவ தளங்களை வைத்துள்ளது.

பஹ்ரைனிலுள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படை அணியின் தலைமையகத்தில் இருந்துதான் ஈரான் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு பதிலடியாக உலகில் மற்றொரு மூலையில் இருக்கும் அமெரிக்க நிலப்பரப்பை தற்போதைக்கு நேரடியாக தாக்க – ஈரானுக்கு வாய்ப்பில்லை என்பதால், அமெரிக்க படை நிலை கொண்டிருக்கும் – வளைகுடா நாடுகளின் தளங்களை ஈரான் குறி வைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி வருகிறது.

ஈரானைப் பொறுத்த வரை அமெரிக்காவின் ராணுவ தளங்களை தாக்குவது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகள், உலக நாடுகளின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருப்பதால் – இந்த நாடுகளில் நடக்கும் சிறிய வெடிப்பு கூட சர்வதேச சந்தையில் எண்ணையின் விலையை உயர்த்தும். இது மறைமுகமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் உலக நாடுகளின் அமைதியையும் சீர்குலைக்கும். இதையே அமெரிக்காவுடனான போரில் ஈரான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

குறிப்பாக இந்த தாக்குதல் மூலம் – தான் தாக்கப்பட்டால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் அமைதியற்றதாக மாறும் என்ற செய்தியை உலக நாடுகளுக்கு தர ஈரான் முயற்சிக்கின்றது.