
ஈரானில் தொடர்ந்தும் தீவிரமான தாக்குதல்களை தமது ராணுவம் நடத்தி வருவதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
“தெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது சக்திவாய்ந்த தாக்குதலை வான்வழியாக நடத்த ஏற்பாடு செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தெஹ்ரானில் விமான நிலையம் உள்ளிட்ட 07 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க, ஆயத்துல்லா அலி கொமெய்னியின் கொலை “முஸ்லிம்களுக்கு எதிரான, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான வெளிப்படையான போர் அறிவிப்பு” என்று ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

“இந்த துயர நிகழ்வு இன்று இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சோதனை” என்று உச்ச தலைவரின் கொலைக்கு இரங்கல் தெரிவித்து எழுதப்பட்ட செய்தியில் பெஷெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.



