தலைப்புச் செய்திகள்

உச்ச தலைவர் கொமெய்னி மரணத்தை அடுத்து, ஈரானின் தாக்குதல்கள் தீவிரம்

ரானின் உச்ச ஆத்மீகத் தலைவர் ஆயத்துல் அலி கொமெய்னி – அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமையை அடுத்து, மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் 27 தளங்களையும் இஸ்ரேலிலுள்ள ராணுவத் தளங்களையும் தாக்கியுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெடிப்புகள் தொடர்ந்து கேட்டு வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளைள, ஈரான் இன்று மிகவும் கடுமையாக தாக்கினால், இதற்கு முன் பார்த்திராத ஒரு படையால் தாக்கப்படும் என்று – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை – ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உட்பட ஒரு இடைக்கால கவுன்சில் நாட்டை மேற்பார்வையிடும் என்று ஈரான் அரசாங்கம் கூறியுள்ளது.

ஈரானிலுள்ள 24 மாகாணங்களில் நடந்த தாக்குதல்களில் குறைந்தது 201 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் பழிவாங்கும் தாக்குதல்கள் கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க சொத்துக்களை குறிவைத்துள்ளன.

86 வயதுடைய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி, நேற்று சனிக்கிழமை அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அதன்போது அவரின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளையும் உயிரிழந்தனர்.