தலைப்புச் செய்திகள்

குவைத்தில் அமெரிக்காவின் பல போர் விமானங்கள் விழுந்தாக அந்த நாடு அறிவிப்பு

ரான் முழுவதும் இதுவரை 131 மாவட்டங்களில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு ட்ரோன்களின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

சைப்ரஸில் உள்ள இங்கிலாந்து ராணுவத் தளத்தைத் ட்ரோன்தாக்கிய நிலையில், ஓடுபாதையைத் தாக்கியதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூப்பர் குறிப்பிட்டுள்ளார்.

குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சுகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அனைத்து பணியாளர்களும் உயிர் பிழைத்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 149 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.