
ஈரான் – இஸ்ரேலை விடவும் அதிக படை வீரர்களைக் கொண்ட நாடாகும். மக்கள் தொகையும் 10 மடங்கு அதிகம்.
ஈரானிடம் உள்ள மொத்த படை வீரர்களின் எண்ணிக்கை சுமார் 11,80,000 பேர். இதில் 06 லட்சத்திற்கும் மேற்பட்டோர் செயல்பாட்டிலும் மூன்றரை லட்சம் பேர் ரிசர்வ் படையிலும் உள்ளனர்.
மூன்றரை லட்சம் பேர் ராணுவப்படையிலும், 2,20,000 பேர் பரா மிலிட்டரி படையிலும் உள்ளனர். 42,000 விமானப்படை வீரர்களும் 18,500 கடற்படை வீரர்களையும் ஈரான் கொண்டிருக்கிறது.
இது தவிர IRGC எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையும் உள்ளது. இதனிடம் 1,25,000 மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.

முப்படைகளுடன் இயங்கும் IRGCதான் பாரசீக வளைகுடாவில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிக்கும் முக்கிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது. கடலில் கெரில்லா தாக்குதலில் நடத்துவது, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்துவது என இந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படை பெரும் நெருக்கடியை கொடுக்கக்கூடியது.
ஈரானிடம் உள்ள படைவீரர்களின் பாதி அளவு பலத்தை மட்டுமே இஸ்ரேல் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் வசம் மொத்த படை வீரர்களின் எண்ணிக்கை 6,70,000 ஆக உள்ளது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் செயல்பாட்டிலும் ரிசர்வ் படையில் 04 லட்சத்து 65 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.
ராணுவத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். விமானப்படையில் சுமார் 89 ஆயிரம் பேரும் கடற்படையில் சுமார் 20000 பேரும் இஸ்ரேல் வசம் உள்ளனர்.
ஈரானிடம் இஸ்ரேலை விட ராணுவப்படும் அதிகம் என்றாலும் இது மட்டுமே மோதலில் யார் ஆதிக்கம் செலுத்துவார் என்பதை முடிவு செய்து விடாது. ஈரானிலிருந்து இஸ்ரேல் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் தடைவழி தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இரு தரப்பும் வான் வழியாகவே சண்டையிட வேண்டி இருக்கும்.
அவ்வாறு இருக்கும்போது இருதரப்பிடமுள்ள வான்வழி தாக்குதலுக்கான ஆயுதங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஈரான் வசம் 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.
இது தவிர ஃபைட்டர் ஜட்கள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானங்கள் உள்ளன.
ஈரான் மீதான பொருளாதார தடைகளால் அந்நாட்டிடம் அதிநவீன விமான தொழில்நுட்பங்கள் இல்லை. விமானப்படியில் உள்ள பெரும்பாலான விமானங்கள் பழையன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரான் வசம் உள்ள விமானங்கள் அந்நாட்டிற்கு பின்னடைவாக கருதப்பட்டாலும் அதனிடம் உள்ள ஏவுகணைகள் இஸ்ரேலை கடுமையாக சோதிக்க கூடியவை.
மத்திய கிழக்கில் பாலில்ஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் ஈரான் கை தேர்ந்து விளங்குகிறது. ஈரானால் இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கில் எந்த மூலையில் வேண்டுமானாலும் தாக்குதலை கொடுக்க முடியும்.
மறுபுறம் ஆளில்லா விமானத் தயாரிப்பில் இஸ்ரேலும் முன்னணி வகிக்கிறது. ஈரானில் உள்ள தலைவர்களை படுகொலை செய்யவும், என்னை வளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை தகர்க்கவும் தன்னிடம் உள்ள வான்வழி ஆயுதங்களை இஸ்ரேலால் பயன்படுத்த முடியும்.


