தலைப்புச் செய்திகள்

கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி மரணம்: பலர் வைத்தியசாலையில்

ஹல்துமுல்ல – உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற, மேற்படி பஸ் வண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

பஸ் பணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கதவு திறந்திருந்ததாகவும், அதை மூட முயன்ற போது, பஸ் – கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள ஒரு தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.

விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பஸ் நடத்தநர், ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட பலர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் சாரதி இருக்கைப் பட்டி அணியவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.