தலைப்புச் செய்திகள்

நாம் ஊடகர் பேரவையின் ரி-சேர்ட் அறிமுக நிகழ்வும், உறுப்பினர் கௌரவிப்பும்

நாம் ஊடகர் பேரவை (We Journalists Forum) அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும், ரீ-சேர்ட் அறிமுக நிகழ்வும் இன்று (17) அட்டாளைச்சேனை ரெஸ்ட் வேவ் கடற்கரை விடுதியில் இடம்பெற்றது.

அமைப்பினுடைய தலைவரும் ஊடகவியலாளருமான யூ.எல்.மப்றூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக சர்வதேச மனித உரிமைகள் – க்ளோபல் மிஷன் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் , இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவரும், சமூக நல செயற்பாட்டாளரும், ஒலிபரப்பாளருமான மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக NEST நிறுவன பணிப்பாளரும் பொறியியலாளரும் ஊடகவியலாளருமான என்.எம். சப்னாஸ், ASM Distributor நிறுவன பணிப்பாளர் கே. அஸ்மீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான – ஏ.பி. அப்துல் கபூர் சட்டத்தரணியானமையினை கௌரவிக்கும் வகையில், அமைப்பினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அத்துடன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு ரீ – சேர்ட் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வினை அமைப்பின் செயலாளரும், ஊடகவியலாளருமான றிசாத் ஏ காதர் நெறிப்படுத்தியிருந்தார்.

நாம் ஊடகர் பேரவையானது – போதைப்பொருளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு உள்ளிட்ட பல்வேற சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.