தலைப்புச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் மரணம்: புர்கா அணிந்து வந்த கொலையாளி

கொழும்பு – ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் 44 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இறந்தவரைத் தவிர, மூன்று வயது சிறுமி மற்றும் நான்கு வயது சிறுவன் ஒருவரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

காயமடைந்த இரண்டு குழந்தைகளும் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (16) இரவு ஜிந்துபிட்டியவில் உள்ள 125 வட்டா என அழைக்கப்படும் இடத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய குழுவில் ஒருவர் புர்கா அணிந்து வந்தமை, சிசிரிவி காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.