தலைப்புச் செய்திகள்

கட்டாரிலிருந்து தனது ராணுவத்தினரை அமெரிக்கா வெளியேற்றுகிறது

ஈரானில் அதிகரித்து வரும் பதற்றத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டாரிலுள்ள தனது படைவீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது.

பத்தாயிரம் அமெரிக்க வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் ராணுவ பணியாளர்களும் அங்கு உள்ளனர்.

எச்சரிக்கை நடவடிக்கையாக இவர்களில் சிலரை அமெரிக்காவும் பிரிட்டனும் திரும்பவும் அழைத்துள்ளன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரங்களுக்கு ஈரான் தனது வான்வெளியை மூடியது.

அமெரிக்கா இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளதால், மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அதன் ராணுவத் தளங்களை தாக்குவோம் என, ஈரான் எச்சரித்திருந்தது.