தலைப்புச் செய்திகள்

ஹெரோயினுடன் கைதான அதிபர், சேவையிலிருந்து இடைநீக்கம்

அனுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் – சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த அதிபர், பேலியகொட நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் கணவராவார்.

அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த அதிபர் நிறுவனக் கோவையின் விதிகளின் கீழ் – ஒரு குற்றத்தைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், சம்பந்தப்பட்ட அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி அதிபர் அண்மையில் 01 கிலோகிராம் 118 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த அதிபரின் மனைவி – தனது நகரசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.