தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய், வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவை இன்று (07) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை முன்மொழிந்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து சட்டமா அதிபரின் கருத்துக்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி கூறினார்.

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது எவ்வித சட்டங்களும் இல்லை. எனவே, புதிய சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தால் தேர்தலை நடத்த முடியும்” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.