தலைப்புச் செய்திகள்

பௌத்த துறவி தலைமையில் தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் புறக்கணிப்பு

தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றை – புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி நியமித்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொலன்னறுவை சோலோஸ்மஸ்தான ரஜமஹா விஹாரையின் தலைமை பீடமான மகா விஹாரவன்ஷிக ஷ்யாமோபலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விஹாரப் பிரிவின் அனுநாயக்க தேரர் வெண்டருவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரத்தனபால உபாலி நாயக்க தேரர் – இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களின் விபரங்கள்;

  1. கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர்,
    ஷியமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் பிரதம பதிவாளர்
  2. கலாநிதி கல்வெவ விமலகந்த தேரர்
  3. பேராசிரியர் பி.பி. மண்டவல
  4. பேராசிரியர் செனரத் திசாநாயக்க
  5. பேராசிரியர் ஜகத் வீரசிங்க
    இல. 147D 2/3, ராஜசிங்க மாவத்தை, கொரதொட்ட, கடுவெல
  6. பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி
    வரலாறு மற்றும் தொல்லியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
  7. பேராசிரியர் மங்கள கட்டுகம்பொல
    தொல்லியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்
  8. பேராசிரியர் ஆர்.எம்.எம்.சந்திரரத்ன
    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை
  9. சிரேஷ்ட பேராசிரியர் மலிங்க அமரசிங்க
    தொல்லியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்
  10. சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவா
    இல. 139/22 D, நாகஹாவத்தை வீதி, மஹரகம
  11. பேராசிரியர் சமித மணவடு
    இல. 27/1, குடுவாமுல்ல வீதி, கட்டுபெத்த, மொரட்டுவ
  12. கலாநிதி (திருமதி) ரோஸ் சோலங்கா ஆராச்சி
    இல. 260/A/1, ஜூபிலி மாவத்தை, கண்டாவளை, கட்டான
  13. கலாநிதி (திருமதி) ஸ்ரீயானி ஹத்துருசிங்க,
    தொல்லியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்
  14. கலாநிதி விஜேரத்ன பொஹிங்கமுவ
    வரலாறு மற்றும் தொல்லியல் துறை, ருகுனு பல்கலைக்கழகம், மாத்தறை
  15. கலாநிதிபி.டி. நந்ததேவா
    இல. 90/81, வீரவ இடம், பஹல கரகஹமுன, கடவத்தை
  16. கலாநிதி காமினி விஜேசூரிய
  17. கலாநிதிஅருண ராஜபக்ஷ
    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை
  18. ஹேமந்த குமார பாலச்சந்திர, கட்டிடக் கலைஞர்
    இலக்கம் 112, மலமுல்ல, பாணந்துறை

வர்த்தமானியின்படி, குழுவின் பதவிக்காலம் 2025 மார்ச் 10 முதல் 2027 மார்ச் 09 வரை அமுலில் இருக்கும்.