
‘அஸ்வெசும’ நலத்திட்டத்திற்கான வருடாந்த தகவல் புதுப்பிப்புகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தத் திட்டத்தில் பதிவுசெய்த குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் – தற்போது சலுகைகளைப் பெற்றாலும், இல்லையென்றாலும் தங்கள் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் சபை அறிவித்துள்ளது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் குறைகளைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், தங்கள் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏனெனில் இந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே சரிபார்ப்புக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் தகவல்களை மீண்டும் வழங்கும் போது, தேசிய அடையாள அட்டை மற்றும் செயலில் உள்ள கைத் தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://eservices.wbb.gov.lk எனும் லின்க்கை பார்வையிடுவதன் மூலம் தங்கள் தகவல்களை ஒன்லைனில் புதுப்பிக்கலாம்.



