தலைப்புச் செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவரும் மகனும் கைதானமையை அடுத்து, நகரசபை உறுப்பினர் நிரஞ்சல குமாரி ராஜிநாமா

பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியி உறுப்பினரின் கணவரும் மகனும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பேலியகொட நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட திஸ்னா நிரஞ்சல குமாரி, இந்த சம்பவத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தனிப்பட்ட மற்றும் நெறிமுறை முடிவாக பதவி விலக முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேற்படி நகரசபை உறுப்பினர் – கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தின் பிரதியொன்றை, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பியுள்ளார்.

நடந்து வரும் சட்ட செயல்முறைக்கு உதவவும், தனது கட்சியால் ஊக்குவிக்கப்படும் தூய்மையான அரசியலின் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கவும் விரும்புவதாக மேற்படி நகரசபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்பான செய்தி: தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் கணவர் ஹெரோயினுடன் கைது