
மதுரு ஓயாவில் உள்ள இலங்கை ராணுவப் பயிற்சிப் பாடசாலையில், ராணுவப் பயிற்சியில் இன்று (29) காலை ஈடுபட்டுக் கொண்டிருந்த போது – கைக்குண்டு வெடித்ததில் காயமடைந்த மூன்று ராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்பாராத இந்த விபத்தின் போது – கால்களில் சிறு காயங்களுக்கு உள்ளான வீரர்கள் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ராணுவத்திற்கும் ரஷ்ய ராணுவத்திற்கும் இடையில் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் கூட்டுப் பயிற்சியின் போது இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


