
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு குற்றவியல் தண்டனைச் சட்ட புத்தகத்தை வழங்கியதாகக் கூறப்படும் பெண் சட்டத்தரணியை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெண் சட்டத்தரணி நேற்று (28) இரவு கடவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் பாதாள கும்பல் தலைவர், இவ்வருடம் பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி வேடமணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதே நாளில் – பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி இம்மாதம் 14ஆம் திகதியன்று நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலையாளிக்கு குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவைப் புத்தகமொன்றினுள் துப்பாக்கியை மறைந்து வைத்து – இஷாரா செவ்வந்தி வழங்கியிருந்தார்.
அந்த புத்தகத்தை வழங்கிய சட்டத்தரணியே தற்போது கைது செய்யப்பட்டு – விசாரிக்கப்படுகின்றார்.


