
ஜனாதிபதியின் உரிமைளை ரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் 150 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக மொத்தம் 151 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக சாமர சம்பத் தசநாயக்க மட்டும் வாக்களித்தார்.
ஜனாதிபதியின் உரிமைகளை ரத்துச் செய்யும் சட்டமூலத்தை கடந்த மாதம் 07ஆம் திகதி – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமர்ப்பித்தார்.
இந்த சட்டமூலம்1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்யவும், முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் விதவை மனைவியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகளையும் ரத்துச் செய்கிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் விதவை மனைவியர்களுக்கான உத்தியோகபூர்வ குடியிருப்புகள், மாதாந்த கொடுப்பனவுகள், செயலக உதவி, போக்குவரத்து வசதிகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை இந்தச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரும்.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு, இதற்கு எதிராக 06 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இது – அரசியலமைப்மை எவ்வகையிலும்ட மீறவில்லை என்று, நேற்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தது.



