தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலியிடம் மன்னிப்புக் கோரினார் பிரசாத் எம்.பி

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10) தான் கடுமையாகப் பேசியமைக்காக, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன இன்று பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

விவாதத்தின் போது தான் தெரிவித்த கருத்து தனிப்பட்ட முறையில் புண்படுத்தியிருந்தால், அதற்காக தனது மன வருத்ததை தெரிவிப்பதாகவும் நாடாளுன்ற உறுப்பினர் பிரசாத் குறிப்பிட்டார்.

பிரசாத் சிறிவர்தனவின் பேச்சு – பாலியல் ரீதியான தொனியைக் கொண்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவர் மன்னிப்புக் கோரினார்

தான் பேசிக் கொண்டிருக்கும் போது தனது ஒலிவாங்கி துண்டிக்கப்பட்டதால், தான் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் இதன்போது கூறினார்.

சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன கூறியபோது, ​​இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை அவமதித்ததாகக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருடன் – லக்மாலி ஹேமச்சந்திர வாக்குவாதப்பட்டடார். அந்த நேரத்தில் இருவரும் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டதைக் காண முடிந்தது.