தலைப்புச் செய்திகள்

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பதில் அத்தியட்சகராக டொக்டர் றிபாஸ் நியமனம்

– நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் –

ல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளராக – அவர் கடமையாற்றி வரும் நிலையில், இந்தக் கடமை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் இன்று (10) புதன் கிழமை வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.ஆர்.எம். ஹாரீஸிடமிருந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக நீண்ட காலம் பணிபுரிந்த டொக்டர் ஏ.எல்.எம்.எப். ரஹ்மான் ஓய்வு பெற்றமையை அடுத்து, வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் நியமிக்கப்பட்டார்.

இன்றைய நிகழ்வின் போது – கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.எல். பாரூக், வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி, வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய பரிபாலகர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதானிகள் மற்றும் சிவில் அமைப்பினர் கலந்து கொண்டனர்.