தலைப்புச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்க, விஜித ஹேரத் புறப்பட்டார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை ஜெனீவாவுக்குப் புறப்பட்டார்.

குறித்த அமர்வு நாளை 08ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த அமர்வில், ​​இலங்கை அரசு சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்தமையைத் தொடர்ந்து, மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த புதிய அரசாங்கத்தின் முன்முயற்சிகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குடன் (Volker Turk) விசேட சந்திப்பொன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என, ஐ.நா அலுவலகத்துக்கான இலங்கையின் பிரதிநிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.