
– தில்சாத் பர்வீஸ் –
கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை – சம்மாந்துறை பொலிஸார் நேற்று (31) மாலை கைது செய்ததோடு, அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு தொகை பணத்தையும் கைப்பற்றினர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வந்த – சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தார்கள்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சென்நெல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 14 கிராம் 800 மில்லி கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 57 கிராம் 900 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் என்பனவும் மீட்கப்பட்டன.



