
அட்டாசேனை பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (04ஆம் திகதி) மாலை 8.00 மணி தொடக்கம், மறுநாள் (050 அதிகாலை 2.00 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலய பொறுப்பதிகாரி இதனை அறிவித்துள்ளார்.
அம்பாறை – கொண்டவட்டுவான் பிரதான நீர் வழங்கல் குழாயில் ஏற்பட்டுள்ள அவசர இருத்த வேலை காரணமாக, இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து சிக்கனமாக பாவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


