
பலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் மோல்டா பிரதமர் ரொபர்ட் அபேலா ஆகியோர் அறிவித்தமையை வரவேற்பதாக சஊதி அரேபியா வரவேற்றுள்ளது.
இன்று (31) சஊதி அரேபிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சவுதி வெளியுறவு அமைச்சகம் “இரண்டு அரசுகளினதும் – தீர்வை வலுப்படுத்தும் நேர்மறையான முடிவுகளை பாராட்டுகிறோம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பலஸ்தீன மக்களின் நீண்டகால துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேவை குறித்து, சர்வதேசத்தின் வளர்ந்து வரும் ஒருமித்த கருத்தை, இந்தத் தீர்மானங்கள் பிரதிபலிக்கின்றன எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைதிக்கு ஆதரவாக மற்ற நாடுகளும் இதேபோன்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியா வேண்டுகோள் விடுத்துள்ளது.


