தலைப்புச் செய்திகள்

க.பொ.த சாதராண தரப் பரீட்சை முடிவுகளை, மீள் பரிசீலிப்பதற்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு

.பொ.த சாதாரண தர முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அந்த முடிவுளை மீண்டும் பரிசீலிப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த பரீட்சை முடிவுகள் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

இது இவ்வாறிருக்க, மாணவர்கள் அல்லது பெற்றோர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், திணைக்களத்தின் அவசர இலக்கம் 1911 ஐ அழைக்கலாம் அல்லது பாடசாலை பரீட்சை நிர்வாகம் மற்றும் முடிவுகள் கிளையை 0112-785922, 0112-784208, 0112-786616 அல்லது 0112-784537 என்ற எண்கள் மூலம் தொடர்பு முடியும்.

அனைத்து பாடசாலை அதிபர்களும் தங்கள் பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளை பதிவிறக்கம் செய்து அச்சிடுவதற்காக, பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை திணைக்களம் வழங்கியுள்ளது.

மேலும், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பெறுபேறுகளைப் பெறுவதற்கு ஒரே மாதிரியான தகுதிகளைப் பெற்றுள்ளனர்.