
ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை – தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான காடையர்கள் குழுவொன்று தாக்கியதாக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனையிலிருந்து – தனது சொந்த ஊர் மாளிகைக்காடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை, தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான சிலர் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஹுதா முறைப்பாடு செய்ததோடு, சிகிச்சைக்காக சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்கள் – தமக்கும் தமது கட்சிக்கும் பாதகமாக அமையும் வகையில், ஹுதா செய்தி எழுதியதாக இதன்போது தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய காடையர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.



