
ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் – எழுவைதீவு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி 15 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பு அதிகரித்ததால், கடத்தல்காரர்கள் இந்த கஞ்சாவை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக நடவடிக்கைகளுக்காக கைப்பற்ற கஞ்சா – ஊர்காவல்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



