தலைப்புச் செய்திகள்

லஞ்சம் பெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

லப்பிட்டிய நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் – லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலத்தகராறு வழக்கு தொடர்பாக இவர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர், வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்குவதற்கு 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

முறைப்பாட்டாளருக்கு எதிராக முதலில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில் – மேல்முறையீடு செய்வதற்கு இந்த அறிக்கை தேவைப்பட்டது.

நீதிமன்ற வளாகத்திற்குள் மதியம் 12:23 மணியளவில் கைது செய்யப்பட்டார்.