தலைப்புச் செய்திகள்

கட்டுநாயக்க பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: 29 வயது நபர் வைத்தியசாலையில்

கட்டுநாயக்க – ஹீனடியன்ன பகுதியில் இன்று (26) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்கானதாகவும், அவர் சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நாட்டில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அவற்றினை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.