தலைப்புச் செய்திகள்

தேசபந்துவை விசாரிக்கும் குழுவுக்கு உதவ இருவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

தேசபந்து தென்னகோனை விசாரிப்பதற்கான குழுவுக்கு உதவ, மேலதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோரை சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.

இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட குழு, அதன் தொடர்ச்சியான விசாரணைக்கு ஆதரவளிப்பதற்காக, பொலிஸ் புலனாய்வுக் குழுவொன்றை பரிந்துரைக்குமாறும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு – கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (25) நடைபெற்ற குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, ​​தொடர்புபட்டவர்களின் பங்கேற்பு உட்பட, அதன் எதிர்கால நடவடிக்கைகளின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் குறித்த ஆரம்ப கலந்தாலோசனைகளில் குழு ஈடுபட்டது.

அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேலும் முடிவுகளை எடுக்க, குழு ஏப்ரல் 28ஆம் திகதி மீண்டும் கூடும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.