தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உருதுக் கவிதை செயலமர்வு: இந்தியக் கவிஞர் பேராசிரியர் மசூத் விசேட பேச்சாளராக கலந்து கொண்டார்

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் மொழித் துறை ஏற்பாடு செய்த உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வொன்று, மொழித் துறைத் தலைவர் கலாநிதி ஏ. விக்கிரமரத்ன தலைமையில், பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்றது.

மொழிகள் தொடர்பான விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலை கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கலந்து கொண்டார்.

இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த உருதுக் கவிஞர் பேராசிரியர் முஹமத் மசூத் அஹமத் இந்த நிகழ்வில் விஷேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன்போது அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை பேராசிரியர் முஹமத் மசூத் அஹமத் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்துக்கு ஒரு பகுதி நூல்களை பீடாதிபதியிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், பேராசிரியர் எம்.ஏ.எஸ்.எப். சாதியா, சிரேஷ்ட விரிவுரையாளர்கள் என். சுபராஜ், கே.ஆர். பாத்திமா சீபா, விரிவுரையாளர் ஏ. அப்துல் ரஸ்ஸாக் உள்ளிட்டவர்களுடன் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

உருதுக் கவிஞர் பேராசிரியர் முஹமத் மசூத் அஹமத் (இந்தியா)
பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்