
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06ஆம்திகதிகளில் மூடப்படும்.
மே 07 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகளாகவும், வாக்கு எண்ணும் நிலையங்களாகவும், வாக்குப் பெட்டிகள் மற்றும் பிற தேர்தல் தொடர்பான பொருட்களை விநியோகிப்பதற்கும் சேகரிப்பதற்கும் பாடசாலை வளாகங்களைப் பயன்படுத்த – தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மே 04 ஆம் திதிக்குள் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், மேசைகள், நாற்காலிகள், அரங்குகள் மற்றும் தேவையான வசதிகளுடன் தயாராக இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஒருங்கிணைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



