தலைப்புச் செய்திகள்

கார்த்திகா கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

ரு பெண்ணை கொடூரமாக கொலை செய்து, சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் வைத்து விட்டுச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் 2015ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி கொழும்பிலுள்ள ஒரு லொட்ஜில் நடந்த – தர்மராஜா கார்த்திகாவின் கொலை வழக்கில் சந்தேக நபரான பெட்ரிக் கிருஷ்ணராஜாவை குற்றவாளி என கொழும் புமேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் – பின்னர் பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையம் அருகே கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்து, சடலத்தை மறைத்து வைத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ், சந்ததேக நபர் கிருஷ்ணராஜா மீது – சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, சந்தேக நபர் மீது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபித்ததாக நீதிமன்றம் முடிவு செய்தது.

பிரதிவாதி தனது குற்றமற்ற தன்மையைக் கூறி, தண்டனை வழங்குவதற்கு முன்பு நீதிமன்றத்தில் பேசிய போதிலும், விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் உறுதியானவை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.