தலைப்புச் செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்று தொடங்கியது: 648,000 பேர் தகுதி

ள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (24) தொடங்கியது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

வாக்காளர்கள் தங்கள் தபால் வாக்குகளை ஒதுக்கப்பட்ட திகதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை பதிவு செய்யலாம்.

648,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் – தபால் வாக்குகளைப் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் 2025 மே 06 ஆம் திதி நடைபெற உள்ளது.