
கண்டியில் நடைபெற்று வரும் ‘ஸ்ரீ தலதா வந்தனாவ’ கண்காட்சி பணியில் இருந்தபோது இரண்டு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக இவர்கள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு கண்காட்சியான ஸ்ரீ தலதா வந்தனாவ இன்று (25) தொடர்ந்து எட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 18 ஆம் திகதி ஜனாதிபதி தொடங்கி வைத்த இந்த நிகழ்வு ஏப்ரல் 27 ஆம் திகதி வரை நடைபெறும்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



