தலைப்புச் செய்திகள்

தேசபந்துவை பணிநீக்கம் செய்யுமாறு, தேசிய மக்கள் சக்தியின் 115 எம்.பிகள் கையொப்பமிட்டு கடிதம் ஒப்படைப்பு

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பணி நீக்கம் செய்யுமாறு கோரும் கடிதமொன்று, தேசிய மக்கள் சக்தியின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், சபாநாயகரிடம் இன்று (24) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் 2023இல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக – தேசபந்து தென்னகோன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினைக் கொண்ட தரப்புக்கும் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டதாக, தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரியொருவர் மரணமடைந்ததோடு, மற்றொருவர் காயமடைந்தார்.