
லஞ்சம் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் இன்று (24) கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனை, ஏப்ரல் 01ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம், ஊழலை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (24) முன்னாள் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை கைது செய்தனர்.
லஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, அவரை ஏப்ரல் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



