தலைப்புச் செய்திகள்

மே 06இல் தேர்தல்: 01 கோடி 73 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (20) அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மார்ச் 17 ஆம் திதி தொடங்கிய 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று மதியம் 12.00 மணிக்கு நிறைவடைந்தது.

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று (19) நள்ளிரவுடன் முடிவடைந்தது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்தம் 01 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரதது 330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.