தலைப்புச் செய்திகள்

தேசபந்துவை ஏப்ரல் 03 வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை – ஏப்ரல் 03ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

நேற்று நீதிமன்றில் சரணடைந்த தேசபந்து – நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் சில வாரங்கள் தலைமறைவாகியிருந்த தேசபந்து தென்னகோன், நேற்று மாத்தறை நீதிமன்றில் சரணடைந்தார்.

இந்த நிலையிலேயே, அவரை அடுத்த மாதம் 03ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.