
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளைய தினம் வரை (20) விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் – சில நாட்களாக தலைமறைவாகியிருந்த அவர், இன்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்தார்.
2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், அவரைக் கைது செய்யுமாறு பெப்ரவரி மாத இறுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்தார்.
தொடர்பான பதிவு



